முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, அப் பகுதி மக்கள் 30 பேர் சேர்ந்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விவாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மார்ச் 12ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த மனு மீதான விசாரணை நிறைவடைந்து தீர்ப்பளிக்கும் வரை, அப் பகுதியில் குப்பைகளைக் கொட்ட, நீதிமன்றம் தடை உத்தரவும் பிறப்பித்துள்ளது.
இது இவ்வாறு இருக்க, முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு மாநகர சபை சார்பில் ஆஜரான சட்டத்தரணி உயர்நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.

