கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - November 9, 2017

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட உள்துறைமுக வீதி காக்கா தீவுக்கு அண்மையில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட 37 வயதான குறித்த நபரிடமிருந்து 161 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரையும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா

Posted by - November 9, 2017

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார். இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறித்த பதிலை அளித்துள்ளார். இலங்கைத்

பெற்றோல் விநியோகம் ஆரம்பம், நாளை காலையில் வழமைக்கு- பெற்றோலிய அமைச்சு

Posted by - November 9, 2017

பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார். டுபாயிலிருந்து “நெவஸ்கா  லேடி” கப்பலில் வரவழைக்கப்பட்ட பெற்றோலே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாளைக் காலையாகும் போது பெற்றோல் விநியோக நடவடிக்கை வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மெதமுலன வரி : 1000 ரூபாவுக்கு 20 சதம் வரி, SMS இற்கு 25 சதம் வரி

Posted by - November 9, 2017

வங்கிக் கொடுக்கல் வாக்களில் ஈடுபடுத்தப்படும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாவுக்கும் அடுத்த வருடம் முதல் முதல் 20 சதம் வரியாக அறிவிடப்படும் எனவும், இதற்கு மெதமுலன வரி என அழைக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஏப்றல் மாதம் முதலாம் திகதி முதல் இந்த வரி அமுலுக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். அடுத்த வருடம் முதல் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்காக தொலைபேசியில் அனுப்பப்படும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ். இற்கும் 25 சதம் வரியாக

மட்டக்குளி பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - November 9, 2017

போலி ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸ் நிலைய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி சானிமா விஜேபண்டார இன்று (09) உத்தரவிட்டுள்ளார். கடந்த பாராளுமன்றத் தேர்தல் கடமையில் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிற்றூலியர்கள் மூவர் பெயரில் வழங்கப்பட வேண்டிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை  பெற்றுக்கொள்ள போலியான ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது

எவருடைய அழுத்தத்திலும் வடக்கில் முகாம்களை மூடவில்லை! – இராணுவப் பேச்சாளர்

Posted by - November 9, 2017

வடக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அண்மைக் காலங்களில் – எவருடைய அழுத்தத்தின் மத்தியிலும் அகற்றப்படவில்லை என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார்.

பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்தத் தீர்மானம்!

Posted by - November 9, 2017

எதிர்வரும் தேர்தலின்போது கேகாலை மாவட்டத்தில் பொலித்தீன் பாவனை இன்றி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு…!

Posted by - November 9, 2017

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

2018 ஆம் நிதியாண்டுக்கான பாதீடின் இதுவரையிலான முன்மொழிவுகள்

Posted by - November 9, 2017

2018ம் ஆண்டுக்கான பாதீடு  யோசனை இன்று நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தனது ஆரம்ப உரையில், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இலத்திரனியல் முச்சக்கர வண்டிகளுக்கு 90 வீத வரி விலக்கு வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். இலத்திரனியல் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கும் இறக்குமதி வரிகள் தளர்த்தப்படும் என்பதுடன் இலத்திரனியல் வாகனங்களுக்கான வரி ஒரு மில்லியன் ரூபா வரையில் குறைக்கப்படும் என்று