இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் – ஐ.நா

475 0

இலங்கை இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் குறித்த பதிலை அளித்துள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சிலர் தாம் சித்திரவதைக்கு உட்பட்டதாக அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a comment