யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு…!

5695 0

யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு எதி­ராக மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் முறை­யீடு செய்ய சட்­டமா அதி­பர் திணைக்­க­ளம் ஆலோ­சித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நேற்று வழங்­கப்­பட்ட தீர்ப்பு ஆளு­ந­ரின் தீர்­மா­னத்­துக்கு எதி­ராக அமை­கி­றது. அத­னால் அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டு­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் உத­விச் செய­லா­ளர் மரி­ய­தா­சன் ஜேகூ, ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கல்­வி­யைத் தொடர வெளி­நாடு செல்­லும் விடுப்­பைக் கோரி­யி­ருந்­தார்.

எனி­னும் அவ­ரது விண்­ணப்­பத்­துக்கு வடக்கு மாகாண ஆளு­நர் அனு­மதி வழங்க முன்­தா­கவே ஜெகூ ஆஸ்­தி­ரே­லியா சென்­று­விட்­டார்.

இத­னால் ஆளு­ந­ரின் அறி­வு­றுத்­த­லுக்­க­மைய ஜெகூ மீள கட­மைக்கு அழைக்­கப்­பட்­டார். அத்­து­டன் ஓழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கும் அவர் உட்­ப­டுத்­தப்­பட்­டார்.

ஆளு­ந­ரின் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­க­வும் தனது வெளி­நாடு செல்­லும் விண்­ணப்­பத்­துக்கு விடுப்பை வழங்க கட்­ட­ளை­யி­டு­மா­றும் கோரி, ஜேகூ யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றில் உறு­தி­கேள் எழுத்­தாணை மனு­வைத் தாக்­கல் செய்­தார்.

அந்த மனு மீதான விசா­ர­ணை­யின் பின்­னர் மனு­வில் அவர் கோரிய அனு­கூ­லங்­களை மேல்­நீ­தி­மன்று நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் நேற்­று­முன்­தி­னம் வழங்­கி­னார்.

“மாகாண மேல் நீதி­மன்­றின் கட்­ட­ளைக்கு மாகாண ஆளு­நர் கட்­டுப்­ப­ட­வேண்­டிய அதி­கா­ரி­யில்லை. அவர் கொழும்பு அர­சின் பிர­தி­நிதி. மாகாண அதி­காரி ஒரு­வ­ருக்கு வெளி­நாடு செல்­லும் அனு­ம­தியை வழங்­கும் உயர் அதி­கா­ரம் கொண்­ட­வர் மாகாண ஆளு­நர் மட்­டுமே” என்று அரச சட்­ட­வாதி வாதா­டி­யி­ருந்­தார்.

 

Leave a comment