கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!

4838 58

திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட உள்துறைமுக வீதி காக்கா தீவுக்கு அண்மையில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட 37 வயதான குறித்த நபரிடமிருந்து 161 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரையும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a comment