பெற்றோல் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) மாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
டுபாயிலிருந்து “நெவஸ்கா லேடி” கப்பலில் வரவழைக்கப்பட்ட பெற்றோலே இவ்வாறு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளைக் காலையாகும் போது பெற்றோல் விநியோக நடவடிக்கை வழமைக்குத் திரும்பும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

