போலி ஆவணங்கள் தயாரித்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளிய பொலிஸ் நிலைய முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதிபதி சானிமா விஜேபண்டார இன்று (09) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தல் கடமையில் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிற்றூலியர்கள் மூவர் பெயரில் வழங்கப்பட வேண்டிய ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்ள போலியான ஆவணங்களைத் தயாரித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவருக்கு இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவில் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

