வன்னி விழிப்புலனற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு

Posted by - November 11, 2017

வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர் சங்கத்தினை சேர்ந்த 88 பேருக்க்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் இவ்வுதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடிகளுக்கு  மத்தியில்  வாழ்ந்து வரும் வன்னியில் உள்ள விழிப்புனர்வு அற்ற 88 பேருக்கு  தொடர்ச்சியாக இவ்வுதவி வழங்கப்படவுள்ளது. வன்னி விழிபுலனற்றோா் சங்கத்தின் தலைவரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  யாழ்

மட்டக்களப்பில் 36 பேர் கைது

Posted by - November 11, 2017

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக  பொலிஸார்  தெரிவிக்கின்றனர். இவ் விசேட வீதிசோதனை நடவடிக்கை நேற்று  இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 3 மணிவரை  இடம்பெற்றுள்ளது.  இதில்  மட்டக்களப்பு  தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 19 பேரையும், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 3 பேரையும், வாகரை பொலிஸ் பிரிவில் 4 பேரையும், வாழைச்சேனை

2100 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - November 11, 2017

அரசாங்கம் உயர்தரத்தில் அறிமுகம் செய்துள்ள தொழிற்துறைக்கான பாடநெறிகளை கற்பிப்பதற்கு தேவையான பட்டதாரி ஆசிரியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் 2100 ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 2017.12.11 ஆம் திகதிக்கு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் துறைசார்ந்த பட்டப்படிப்பை முடித்துள்ளவர்கள் இந்த ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  26 பாடநெறிகளைக் கற்பிக்கத்

தோட்டத் தொழிலாளர்களுக்கான மதுபானத்தின் விலை குறைக்கப்பட வேண்டும்- ஜோன் செனவிரத்ன

Posted by - November 11, 2017

பியருக்கான விலையை விடவும் தோட்டத் தொழிலாளர்கள் அருந்தும் மதுபானத்துக்கு விலை குறைப்பை மேற்கொண்டால் வரவேற்கத்தக்கது என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். தோட்ட மக்கள் தங்களது சிரமத்தை மறப்பதற்கு மாலையில் குறைந்த விலையில் உள்ள (கசிப்பு) சாராயத்தை உட்கொள்கின்றனர். இதனால் அவர்களது உடல் நலத்துக்குப் பாதிப்பு ஏற்படுகின்றது. இதிலிருந்து அவர்களை மீட்பதற்கு அவர்கள் அருந்துவதற்குள்ள மதுபான வகையின் விலையைக் குறைக்க முடியுமாயின்

எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

Posted by - November 11, 2017

நாட்டில் கடந்த வாரம் நிலவிய  எரிபொருள் நெருக்கடி நிலைமை குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு, குறித்த அறிக்கையைத் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது. குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளித்தபின்னர், அது குறித்து அமைச்சரவை சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது

பியர் விலை குறைப்பு நாட்டுக்கு ஆபத்து- சம்பிக்க அமைச்சர்

Posted by - November 11, 2017

பியர் ரக மதுபானத்தின் விலை குறைப்பினால், சட்டவிரோத சாராயத்தின் பயன்பாட்டை தடுக்க முடியாது எனவும் இவ்வாறு பியருக்கான வரி நீக்கத்தினால் அரசாங்கத்துக்கு கிடைக்கவிருந்த வருமானம் கிடைக்காமல் போவது மாத்திரமே இடம்பெறுவதாகவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க  தெரிவித்துள்ளார். இவ்வாறு பியர் விலை குறைப்பினால் சிறுவர்களும், பெண்களும் மதுபானப் பயன்பாட்டுக்கு தூண்டப்படுவதாகவும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி உறுப்பினரான அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க  சுட்டிக்காட்டியுள்ளார். தான் இந்த நடவடிக்கை ஆதரவு

நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே இந்த பட்ஜெட்- JVP

Posted by - November 11, 2017

நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் நாட்டை விற்பனை செய்யும் ஒரு பிரேரணையே ஆகும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அக்கட்சி அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனைக் கூறியுள்ளது. 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட கொள்ளையடிக்கும் முதலாலித்துவ பொருளாதார முறைமையின் ஒரு வேகமான நடவடிக்கையாக இந்த வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது எனவும் அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. மேலும் 

வனராஜா பகுதியில் லொறியொன்று ஆற்றில் விழுந்து விபத்து

Posted by - November 11, 2017

ஹட்டன் – பொகவந்தலா பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறியே, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  பாதையை வீட்டு விலகி டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாதையோரமிருந்த மின்கம்பத்தில் மோதிய பின்பே ஆற்றில் விழுந்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

இன்று காலை வரை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் நடவடிக்கையில் 1800 பேர் கைது

Posted by - November 11, 2017

நாடு முழுவதுமுள்ள பொலிஸ் நிலையங்களில் நேற்றிரவு 11.00 மணி முதல் இன்று அதிகாலை 3.00 மணி வரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவர்களில் சந்தேகத்தின் பேரில் 962 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 758 பேரும் ஏனைய குற்றச் செயல்களுடன் தேடப்பட்டு வந்த 86 பேரும் அடங்குவதாகவும் தலைமையம் இன்று (11) வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 2018 ஆம் நிதியாண்டிற்கான பாதீடு

Posted by - November 11, 2017

முன்னாள் போராளிகள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு சிறப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.