வனராஜா பகுதியில் லொறியொன்று ஆற்றில் விழுந்து விபத்து

201 0

ஹட்டன் – பொகவந்தலா பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மதியம் 1.30 மணியளவில் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறியே, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி  பாதையை வீட்டு விலகி டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் உயிர் ஆபத்துக்கள் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாதையோரமிருந்த மின்கம்பத்தில் மோதிய பின்பே ஆற்றில் விழுந்துள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

Leave a comment