2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்த வேண்டும் (காணொளி)
வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணம் 2017ஆம் ஆண்டை பனை அபிவிருத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தவுள்ளதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து தாயும், மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் வீதியில் அமைந்துள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து இளம் தாய் ஒருவரும், அவரது 7 வயது மகனும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சதீஸ்வரன் சுதாசினி, 7 வயதுடைய சதீஸ்வரன் டினோஸன் ஆகியோரே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டில் வசித்து வந்த உயிரிழந்த பெண்ணின் மாமியார், கிராம அலுவலர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். மாமனார்
நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் இயங்குவதன் மூலமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆண்டிற்கான வறுமை ஒழிப்புத் திட்டத்தை செயற்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கேட்டுக்கொண்டார். இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற புத்தாண்டு உறுதிமொழி எடுக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…
வவுனியா ராசேந்திரங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது. பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வந்த மக்கள் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு பற்றைகளும் முட்செடிகளும் நிறைந்து காணப்படும் விக்ஸ் காடு என அழைக்கப்படும் பகுதியில் நிலத்தை பண்படுத்தி சுயமாக குடியேறியிருந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து பின்னரான காலப்பகுதியில்
உலகம் முழுவதிலும் 122 செய்தியாளர்கள் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டதாக ஆய்வறிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் கொலை, வெடிகுண்டு தாக்குதல் மற்றும் திட்டமிட்டவகையில் 93 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏனைய 29 பேரும் இயற்கைப் பேரிடர் மற்றும் விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 20 பேர் வானுர்தி விபத்துக்களால் பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களில் அதிகமான பத்திரிகையாளர்கள் ஆபிரிக்கா, ஆசியா பசுபிக், அமெரிக்கா,
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. மியன்மார் நாட்டின் சிறுபான்மை மக்களான ரொஹிங்கிய முஸ்லிம்கள் ரக்கிங்ன் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் காவல்துறையினரல் தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது, காவல்துறையைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி இந்தத் தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த காணொளிப் பதிவுகளின் உண்மைத் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியன்மார்
அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலையை 20 ரூபாவிலிருந்நது 30 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையாளர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். இருப்பினும், அரசாங்கத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாத விற்பனையாளர்களுக்குப் பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க
60 மின்சார உற்பத்தி இயந்திரங்களை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை மின்சார சபை கவனம் செலுத்தியுள்ளது. நாட்டில் அவசர மின்சாரத் தேவையொன்று ஏற்படுமாயின், அதற்கு முகங்கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர்த்தேங்களின் நீர் மட்டம் குறைவடைந்து வருகின்றது. இந்த நிலையில், மின்சாரத் துண்டிப்பைத் தவிர்ப்பதற்காக மின்சார உற்பத்தி இயந்திரங்களைக் கொள்வனவு செய்யவுள்ள இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. இதற்கான யோசகை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக
போதைப்பொருள் மற்றும் தொற்றா நோய்களால் முழு உலகமும் சவாலை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிலையான அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட அரசாங்கத்தின் விசேட செயற்திட்டம் தொடர்பான நிகழ்வொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண் டவாறு தெரிவித்துள்ளார். தொற்றாநோய் மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றால் இலங்கையும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின், பூகோள நிலைமைகள் குறித்து ஆராய வேண்டும். இதனூடாக எமது
மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வறுமையில் வாடுவதாக மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்தின் செயலாளர் க. பிரபாகரன் தெரிவித்துள்ளார். இவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 4 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் யுத்தத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களது வாழ்வாதாரம், சுகாதாரம், பிள்ளைகளின் கல்வி, போன்ற அனைத்து விடயங்களும் மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தம் நடந்த கொண்டிருந்தபோது மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபா கொடுப்பனவு