வவுனியாவில் விக்ஸ் காடு கிராமத்து மக்களை வெளியேறுமாறு வனத்துறையினர் உத்தரவு!!! (காணொளி)

390 0

vavuniyaவவுனியா ராசேந்திரங்குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காடு என அழைக்கப்படும் கிராமத்தைச் சேர்ந்த 30 குடும்பங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக தெரியவருகிறது.

பல்வேறு இடங்களிலிருந்து யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளாக வவுனியாவிற்கு வந்த மக்கள் அகதிமுகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் வசித்துவந்த நிலையில் 2008 ஆம் ஆண்டு பற்றைகளும் முட்செடிகளும் நிறைந்து காணப்படும் விக்ஸ் காடு என அழைக்கப்படும் பகுதியில் நிலத்தை பண்படுத்தி சுயமாக குடியேறியிருந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து பின்னரான காலப்பகுதியில்  அம் மக்களுக்கான ஒட்டு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது.

அன்நிலையில் நேற்றையதினம் திடீரென விக்ஸ் காட்டு கிராமத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அம் மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளதுடன், காடு வெட்டியதாக கிராம மக்கள் மீது குற்றஞ்சாட்டி நாளைய தினம் வவுனியாவில் அமைந்துள்ள வனத்துறையினரின் அலுவலகத்திற்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இச்செயற்பாடு குறித்து கருத்து தெரிவித்த கிராம மக்கள்

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக இந்த கிராமத்தில்  வசித்து வருகிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் வசித்துவரும் எங்களை எவரும் கடந்த காலங்களில் கண்டுகொள்ளவில்லை. இப்போது எங்கள் கிராமத்திற்கு வீட்டுத்திட்டம் அறிவித்திருக்கும் நிலையில் வனத்துறையினர் வந்து எங்களை வெளியேறுமாறு உத்தரவிட்டு;ளளனர் எங்கள் கிரமத்திற்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டால் இவர்களை வெளியேற்ற முடியாது என்ற காரணத்தினால்தான் வனத்துறையினர் எங்களை இப்போது இந்த இடத்தை விட்டு வெளியேற்ற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மாத்திரம் வருகிறார்கள் எங்கள் பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை பெற்றுத்தரவேண்டுமென்று கோரிக்கையை முன்வைத்தனர்.