போதைப்பொருள் மற்றும் தொற்றா நோய்களால் உலகத்திற்கு சவால் -ஜனாதிபதி சிறிசேன

278 0

02போதைப்பொருள் மற்றும் தொற்றா நோய்களால் முழு உலகமும் சவாலை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட அரசாங்கத்தின் விசேட செயற்திட்டம் தொடர்பான நிகழ்வொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண் டவாறு தெரிவித்துள்ளார்.

தொற்றாநோய் மற்றும் போதைப்பொருள் ஆகியவற்றால் இலங்கையும் பாதிப்பை எதிர்நோக்கி வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமாயின், பூகோள நிலைமைகள் குறித்து ஆராய வேண்டும்.

இதனூடாக எமது நாட்டுக்குப் பொருத்தமான திட்டங்களை நடைமுறைப்படுத்த கவனம் செலுத்தவேண்டும்.

இயற்கை வளங்களைப் பாதுகாத்து, பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதனூடாகவே நிலையான அபிவிருத்தியை அடைய முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.