மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்க காணொளி பதிவுகள் குறித்து விசாரணை

274 0

_93203409_9cfc5d3b-c67e-4beb-9018-eaf3bdcf7a9dமியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது.

மியன்மார் நாட்டின் சிறுபான்மை மக்களான ரொஹிங்கிய முஸ்லிம்கள் ரக்கிங்ன் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் காவல்துறையினரல் தாக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, காவல்துறையைச் சேர்ந்த மற்றுமொரு அதிகாரி இந்தத் தாக்குதலை ஒளிப்பதிவு செய்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த காணொளிப் பதிவுகளின் உண்மைத் தன்மைகள் தொடர்பாக ஆராய்ந்ததன் பின்னர், அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் நாட்டில் கடந்த சில வருடங்களாக ரொஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கானவர்கள் மரணித்ததுடன, 10 லட்சத்துக்கும் அதிகமான ரொஹிங்கியர்கள் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.