இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது

Posted by - November 14, 2017

மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்துடலை அடக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் இந்த வருடம் மாவீரர் நாளை சிறப்பாக நினைவுகூர்வதற்கு ஏற்பாடு செய்யப்படு கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று காலை விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து சிரமதானபணியில் இணைந்து கொண்டனர் இதில் எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது; யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

Posted by - November 14, 2017

வழங்கிய பணத்தை  நீதிமன்றின் ஊடாக  வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர் வட்டி, பிரமிட் வட்டி என்பன சட்டவிரோதமாவை. காசோலைக்கு பணம் வழங்குவதும் சட்டவிரோதமானது. அந்தப் பணத்தை மோசடியாக நீதிமன்றில் வழக்குப் போட்டு மீளப்பெறுவதும் தவறு. மீற்றர் வட்டிக்கு  சட்டத்தரணிகள் அல்லது நொத்தாரிசுகள் வழங்கும் உடன்படிக்கைகளும் சட்டவிரோதமானவை. வங்கிகளால் அறவிடப்படும் அல்லது வழங்கப்படும் வட்டிகளே சட்டபூர்வமானவை” இவ்வாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று வழங்கிய

மனித கொலை தொடர்பில் நபரொருவருக்கு மரண தண்டனை

Posted by - November 14, 2017

சிலாபம் பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றாவளிகள் இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரிதொருவருக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு மாவில பகுதியில் வைத்து நண்பர் இருவர் ஒன்றிணைந்து பொல்லால் பிரிதொரு நபரை சராமாரியாக தாக்கி கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர். மாவில பகுதியை சேர்ந்த ஸ்ரீ ரத்ன புஷ்ப்ப குமார மற்றும் அதே பகுதியை சேர்ந்த சம்பத் பெரேரா ஆகிய இருவருமே

கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள்

Posted by - November 14, 2017

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபர் ஒருவர் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றார். அவர் தான் கொள்வனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு

நல்லாட்சி அரசே நீதி வேண்டும்.!

Posted by - November 14, 2017

நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சூட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று காலை ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டமானது பொயிஸ்டன் தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் 150ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன், எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இடப்பட்டிருந்த தொண்டமானின் பெயரை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள மலைநாட்டு புதிய

விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாது நாளாகவும் லிந்துலை வைத்தியசாலை ஸ்தம்பிதம்.!

Posted by - November 14, 2017

லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பனிபுரியும் சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் இரண்டாவது நாளாகவும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நோயாளர்களை முறையாக கவனிக்காத வகையிலும் இருக்கும் தாதியை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் மருத்துவ விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த தாதி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடுகின்றமையால் குறித்த தாதியை இடமாற்றம் செய்யும் வரை தாம் பணியில்

சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

Posted by - November 14, 2017

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்குக் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல உத்தரவிட்டுள்ளார். தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் வாகனங்களை வாடகைக்குப் பெற்றபோது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தொடரப்பட்டிருக்கும் 09 வழக்குகள் தொடர்பிலான மேலதிக சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கிற்கான சாட்சிதாரிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த வேளையில் முன்னாள் பிரதி அமைச்சர் சிறைச்சாலையிலிருந்து

தேசியத்தை முன்னிலைப்படுத்தும் கொள்கை முன்னெடுக்கப்படும் – கபீர்

Posted by - November 14, 2017

இலங்கைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ரீதியிலான கொள்கையை நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். திட்டங்களுக்காக நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் ஆகக்கூடிய பயனைப்பெற்றுக்கொள்வதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சர் மேலும்

அவுஸ்திரேலிய கடற்படையின் நியூகாசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - November 14, 2017

அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான நியூகாசல் கப்பல் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்போது குறித்த கப்பல் இலங்கை கடற்படையின் சம்பிரதாய நிகழ்வுகளுடன் விமர்சையாக வரவேற்கப்பட்டது. 138.1 மீட்டர் நீளமும் 14.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 4,200 மெட்ரிக் டொன் கொள்ளளவை கொண்டிருப்பதுடன் 184 ஊழியர்கள் அதில் கடமையாற்றுகின்றனர். நான்கு நாள் உத்தியோகபூர்வ சுற்றுலா மேற்கொண்டுள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் 17ம் திகதி கப்பல்