நல்லாட்சி அரசே நீதி வேண்டும்.!

274 0

நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சூட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று காலை ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது பொயிஸ்டன் தோட்டத்தில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதில் 150ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன், எதிர்ப்பு பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இடப்பட்டிருந்த தொண்டமானின் பெயரை அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நீக்கப்பட்டமை மலையக இந்திய வம்சாவளி மக்களிடத்தில் அண்மைக்காலமாக மனகசப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்காங்கே தோட்டப்பகுதிகள் மற்றும் நகர் பகுதிகளில் இவ் விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கட்சியை சார்ந்தவர்கள் மாத்திரம் இன்றி அனைத்து இந்திய வம்சாவளி மக்களும் மனதளவில் பாதித்து வருகின்றனர்.

இந் நிலையை உணர்ந்த நாட்டின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலையீடு செய்து மீண்டும் ஏன் இந்த பயிற்சி நிலையத்திற்கு தொண்டமானின் பெயரை மீள் புதிப்பிக்க முடியாது என கேள்வி எழுப்பியுள்ள நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றவர்கள் ஒட்டு மொத்த இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளை பெற்றே ஆட்சி அமைக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த அரசாங்க காலப்பகுதியிலிருந்து இந்த நாட்டில் மலையக பிரதேசங்களுக்கு அபிவிருத்தி பணிகள் செய்யும் பொழுது குறிப்பாக மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் பெயரில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டது.

அப்போதெல்லாம் இருந்த அரசாங்கங்கள் இவரின் பெயரை நீக்குவதில் கவனம் செலுத்தவில்லை. அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் எமது தலைவருக்கு வழங்கி வந்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் உருவாகுவதற்கு மலையக மக்கள் மூல காரணமாக இருந்தனர் என நாட்டின் பெருந் தலைவர்கள் பேசிக் கொண்டு வருகின்றனர்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கும், அவ் அரசாங்க தரப்பினருக்கு வாக்களிக்கவும், வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தவர் அமரர். தொண்டமான் என்பதை சமீப காலத்தில் மறந்து இந்த ஆட்சியில் உள்ள புதிய தலைவர்கள் மலையக மாற்றம் என கூறிக்கொண்டு மலையக பெருந்த தலைவர்களின் பெயர்களை ஒழித்துகட்டி வருகின்றனர்.

இது அரசியல் ரீதியில் மலையகத்தில் வேறுபாட்டை உருவாக்கியுள்ளது. எனவே உடனடியாக அரசாங்க தலைமைகள் தலையீடு செய்து இவ் விவகாரத்திற்கு தக்க தீர்வினை காணும் வகையில் மீண்டும் இவரின் பெயரை உள்வாங்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் கருத்து தெரிவித்து வழியுறுத்திக் கொண்டனர்.

Leave a comment