இலங்கைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ரீதியிலான கொள்கையை நடைமுறைப்படுத்தப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
திட்டங்களுக்காக நாட்டில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மூலம் ஆகக்கூடிய பயனைப்பெற்றுக்கொள்வதற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

