அவுஸ்திரேலிய கடற்படையின் நியூகாசல் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

334 0

அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான நியூகாசல் கப்பல் சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இதன்போது குறித்த கப்பல் இலங்கை கடற்படையின் சம்பிரதாய நிகழ்வுகளுடன் விமர்சையாக வரவேற்கப்பட்டது.

138.1 மீட்டர் நீளமும் 14.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 4,200 மெட்ரிக் டொன் கொள்ளளவை கொண்டிருப்பதுடன் 184 ஊழியர்கள் அதில் கடமையாற்றுகின்றனர்.

நான்கு நாள் உத்தியோகபூர்வ சுற்றுலா மேற்கொண்டுள்ள குறித்த கப்பலின் ஊழியர்கள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் எதிர்வரும் 17ம் திகதி கப்பல் திரும்பிச்செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment