கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிக்குக் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல உத்தரவிட்டுள்ளார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் வாகனங்களை வாடகைக்குப் பெற்றபோது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக தொடரப்பட்டிருக்கும் 09 வழக்குகள் தொடர்பிலான மேலதிக சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கிற்கான சாட்சிதாரிகள் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த வேளையில் முன்னாள் பிரதி அமைச்சர் சிறைச்சாலையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படாததின் காரணமாகக் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆடிகல இந்த உத்தரவைப் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

