இரண்டாது நாளாகவும் லிந்துலை வைத்தியசாலை ஸ்தம்பிதம்.!

211 0

லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பனிபுரியும் சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் இரண்டாவது நாளாகவும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

நிர்வாகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் நோயாளர்களை முறையாக கவனிக்காத வகையிலும் இருக்கும் தாதியை இடமாற்றம் செய்யக்கோரி நேற்று பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட வைத்தியர்களும் சிற்றூழியர்களும் இன்று இரண்டாவது நாளாகவும் மருத்துவ விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த தாதி நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஈடுபடுகின்றமையால் குறித்த தாதியை இடமாற்றம் செய்யும் வரை தாம் பணியில் ஈடுபட போவதில்லை என இவர்கள் தெரிவிக்கின்றனர்

மருத்துவ விடுமுறை போராட்டத்தில் 20 பேர் ஈடுட்டுள்ள நிலையில் 7 தாதியர்கள் மாத்திரமே கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நோயாளர்களின் நலன் கருதி நுவரெலியா மாவட்ட சுகாதார திணைக்களத்தினால் தற்காலிகமாக வைத்தியர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் வெளிநோயாளர் பிரிவுகள் மாத்திரமே குறித்த வைத்தியரினால் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் சர்ச்சைக்குளாகியுள்ள தாதியை இடமாற்றம் செய்யும் வரை தாம் மருத்துவ விடுமுறையில் ஈடுபட போவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment