கௌரவமான வடமாகாண சபையை தமது வங்குரோத்து அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர் – சி.சிவமோகன்
குறிப்பிட்ட ஒரு சில வன்னிபிரதேச வடமாகாண சபை உறுப்பினர்கள் ஊடக மையமாக கௌரவ வடமாகாண சபையை பயன்படுத்த முயல்கின்றனர். அர்த்தங்கள் அற்ற பொருத்தமற்ற கருத்துக்களை வெளியில் கொண்டு வந்து ஊடகத்தில் இடம் பிடிக்க முயல்கின்றனர். இதன் மூலம் தமது வங்குரோத்து அரசியலை நடாத்த முன் நிற்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அண்மையில் காந்தி சிலை முல்லை நகரில் அமைக்கப்பட்ட போது காந்தி என்ன செய்தார் முல்லைத்தீவுக்கு என ஒரு

