மைத்திரி குறித்து நாங்களே முடிவெடுப்போம் – ஐக்கிய தேசிய கட்சி

240 0

photoஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானிப்பது ஐக்கிய தேசிய கட்சியே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி மற்றும் நீரியல்வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி அதனை தெரிவித்துள்ளார்.

தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினரே மைத்திரிபால சிறிசேனவை தோல்வியடைய செய்ய நடவடிக்கை மேற்கொண்டவர்கள்.

தற்போது முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.

இப்போது 2020ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்க வேண்டும் என கூறுகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதியாக்குவதா? இல்லையா என்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சியே தீர்மானிக்கும்.

மைத்திரிபால சிறிசேனவை நாட்டின் ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசிய கட்சியே, 2020ஆம் ஆண்டு அவரை மீண்டும் ஜனாதிபதியாக்குவதா என்று தீர்மானிக்க வேண்டியதும் ஐக்கிய தேசிய கட்சியே.

அதற்கான உரிமை வேறு யாருக்கும் கிடையாது எனவும் ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி குறிப்பிட்டார்.