வரட்சியை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

327 0

dry_land_001_mini-720x4801நிலவும் வரட்சியான காலநிலை தொடர்பில் குறித்த விடயத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சுர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் வாரத்திற்கு ஒருமுறை கூடி ஆராயவுள்ளனர்.

மின்சக்தி மற்றும் சக்தி வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

எந்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கவும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

இதனிடையே, நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சாரம், நீர் மாத்திரம் அன்றி உணவு பொருட்களையும் சிக்கனமான பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் இவ்வாறு கோரியுள்ளது.

வரட்சியால் ஏற்பட்டும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள இந்த செயற்பாடு அவசியம் எனவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக விவசாய துறை பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதுபோல் நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருவடையாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் மார்ச் மாதம் இரண்டாம் வாரம் வரையில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.