நிதியமைச்சருக்கும் நீதியமைச்சருக்கும் இடையில் முரண்பாடு

417 0

Ravi-K-720x480தெரியாத விடயங்கள் குறித்த கதைக்க வேண்டாம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு தெரிவித்துள்ளார்.

மூன்று லட்சம் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஐந்து வருடங்களுக்கு தங்குமிட வீஸா வழங்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்துள்ள அறிவிப்புக்கு, நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

முன்று லட்சம் அமெரிக்க டொலர் என்ற குறைந்தளவான முதலீட்டுக்கு எவ்வாறு தங்குமிட வீஸா வழங்குவது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இவ்வாறான செயற்பாடுகள், இலங்கையில் உள்ள மத்தியதர வர்த்தகர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கபட்டால் அதற்குத் தாம் எதிர்ப்பு தெரிவிக்கவுள்ளதாகவும், இந்த யோனைக்கு மேலும் பல அமைச்சர்களும் எதிர்ப்பு வெளிவார்கள் என தாம் நம்புவதாகவும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தாம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் படியே செயற்படுவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகப்பதற்கே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே நீதியமைச்சர் தமக்கு தெரியாத விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்க கூடாது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.