ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் இலங்கைக்கு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நற்பெயர் மற்றும் கௌரவத்தை தடுக்க சிலர் கடுமையான முயற்சிகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை சமஸ்டி முறைக்கு கொண்டுச் செல்லவோ, பிளவுப்படுத்தவோ அல்ல.
மீண்டும் யுத்தம் ஒன்று உருவாக்குவதையோ தவிர்க்கவும் தேசிய ஒன்றுமையை வலுப்படுத்தவுமே அரசாங்கம் முனைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

