தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும்

Posted by - January 16, 2017

இன்று தமிழர் கொண்டாடும் விழாக்களில் காலத்தால் பழமையானது பொங்கல் விழாவாகும். ஏறத்தாழ 2500 ஆண்டுகளாகத் தமிழர் பொங்கல் விழாவைக் கொண்டாடி வருவதற்குச் சங்க இலக்கியங்கள் சான்று பார்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள் என வடமாகாணக் கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல

Posted by - January 16, 2017

வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிளிநொச்சியில் முன்னாள் போராளியொருவர் கைது!

Posted by - January 16, 2017

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் நேற்றிரவு பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்திய இளைஞர் இலங்கையில் கைது

Posted by - January 16, 2017

சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுச் செல்ல முற்பட்ட சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் இந்திய இளைஞர் ஒருவரே கட்டுகாநாயக்க வானுர்தி தள சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை 2.40 அளவில் 28 வயதான குறித்த இளைஞர் ஸ்பயிஸ் ஜெட் வானூர்தி சேவைக்குச் சொந்தமான வானூர்தி மூலம் சென்னை நோக்கி பயணமாக இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து 300 கிராம்

மேலும் நான்கு பேர் கைது

Posted by - January 16, 2017

ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாந்தோட்டை மற்றும் வீரவில காவல்துறை நிலையங்களின் ஊடாக நேந்று இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார். இந்த சம்பவ தினத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட 51 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழ் மக்களின் பாரம்பரிய ‘தைத்திருநாள் விழா 2017’

Posted by - January 16, 2017

தைத்திருநாள், தைப்பொங்கல் விழா நிகழ்வொன்று மெல்பேர்ண் மேற்கு வாழ் தமிழர்களால் கடந்த 14-01-2017 சனிக்கிழமையன்று விக்ரோரியா Ashcroft park வில்லியம்ஸ் லேண்டிங் என்னுமிடத்தில் காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெற்றது. நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் நாடு மற்றும் சமய வேறுபாடுகளை கடந்து மிகவும் உணர்வுபூர்வமாகவும், உற்சாகத்துடனும் பங்குகொண்டனர். காலை 10 மணிக்கு மண்பானை வைத்து கலாச்சார முறைப்படி ஆரம்பித்த பொங்கல் நிகழ்வு ‘விந்தம்’ தமிழ்ப்பாடசாலை மாணவர்களது தைவணக்க நிகழ்வுகளுடன் சிறப்பாக ஆரம்பித்தது.

Mushfiqur Rahim மருத்துவமனையில்

Posted by - January 16, 2017

பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் Mushfiqur Rahim காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்சமயம் வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது. இதன்போது, துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த Mushfiqur Rahim 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நியூசிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் Tim Southee  வீசிய பந்து அவரது தலையை தாக்கியது. இதனை அடுத்து Mushfiqur Rahimமிற்கு அவரச முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவர் மேலதிக சிகிச்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாந்துறையை அபிவிருத்தி செய்ய இலங்கைக்கு அமெரிக்கா நன்கொடை

Posted by - January 16, 2017

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 1.6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பயிற்சிக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பயிற்சிகளின் ஊடாக சுற்றுலாத்துறை சிறந்த சேவை ஒன்றை வழங்குவதற்கான இயலுமையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவேலைத் திட்டமானது, திருகோணமலை, பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜெர்மன் அதிபரை விமர்சிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

Posted by - January 16, 2017

ஒரு மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் அறிவித்தமையானது முட்டாள் தனமான ஒரு அறிவிப்பாகும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நாடாகவும் முக்கிய அதிபராகவும் திகழும் மேர்கலின் அந்த அறிவிப்பானது தமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜெர்மனின் பத்திரிகை ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜைகளுக்கு வர்த்தக ரீதியில் முன்னுரிமை அளிப்பதும், தமது நாட்டு எல்லை பாதுகாப்பை

மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டது ஈராக் இராணுவம்

Posted by - January 16, 2017

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டுள்ளதாக ஈராக் இராணுவம் அறிவித்துள்ளது. ஈராக் நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் மொசூல் நகரம், கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது. இந்த நகரம் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே முக்கிய நகரம் ஆகும். இந்த நகரத்தை மீட்டெடுப்பதற் ஈராக் படைகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன. இந்த நிலையில் ஐ.எஸ். இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் மொசூலில் உள்ள முக்கிய