ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வின் போது நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பலாந்தோட்டை மற்றும் வீரவில காவல்துறை நிலையங்களின் ஊடாக நேந்று இரவு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த சம்பவ தினத்தினை அடுத்து கைது செய்யப்பட்ட 51 பேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை – மிரிஜ்ஜவில சீன – இலங்கை தொழிற்சாலை வலயம் ஆரம்ப நிகழ்வு கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

