ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் பல்கலைக்கழகத்தை மீட்டுள்ளதாக ஈராக் இராணுவம் அறிவித்துள்ளது.
ஈராக் நாட்டின் முக்கிய நகரமாக கருதப்படும் மொசூல் நகரம், கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டது.
இந்த நகரம் மட்டுமே ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே முக்கிய நகரம் ஆகும்.
இந்த நகரத்தை மீட்டெடுப்பதற் ஈராக் படைகள் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ். இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் மொசூலில் உள்ள முக்கிய பல்கலைக்கழகம் ஒன்று மீட்கப்பட்டது.
இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள பரிசோதனைக்கூடங்களை ஐ.எஸ். தீவிரவாதிகள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் பெரும்பகுதியை ஈராக் படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

