இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக 1.6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்கியுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டு பயிற்சிக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பயிற்சிகளின் ஊடாக சுற்றுலாத்துறை சிறந்த சேவை ஒன்றை வழங்குவதற்கான இயலுமையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவேலைத் திட்டமானது, திருகோணமலை, பொலனறுவை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களுக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

