ஒரு மில்லியன் அகதிகளை ஏற்றுக்கொள்வதாக ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கல் அறிவித்தமையானது முட்டாள் தனமான ஒரு அறிவிப்பாகும் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் முக்கிய நாடாகவும் முக்கிய அதிபராகவும் திகழும் மேர்கலின் அந்த அறிவிப்பானது தமக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜெர்மனின் பத்திரிகை ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜைகளுக்கு வர்த்தக ரீதியில் முன்னுரிமை அளிப்பதும், தமது நாட்டு எல்லை பாதுகாப்பை வலுப்படுத்துவதுமே தமது முக்கிய கொள்கை எனவும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

