
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் தலைவர் Mushfiqur Rahim காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் தற்சமயம் வெலிங்டனில் இடம்பெற்று வருகின்றது.
இதன்போது, துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த Mushfiqur Rahim 13 ஓட்டங்களை பெற்றிருந்த போது, நியூசிலாந்து அணியின் வேகபந்து வீச்சாளர் Tim Southee வீசிய பந்து அவரது தலையை தாக்கியது.
இதனை அடுத்து Mushfiqur Rahimமிற்கு அவரச முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
எனினும் அவர் மேலதிக சிகிச்கைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு பாரதூரமானமாக இல்லை என Mushfiqur Rahim தெரிவித்தாகவும், முன்னெச்சரிக்கைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் Tamim Iqbal தெரிவித்துள்ளார்.

