மொன்டி பனேசர், அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமனம்.

Posted by - January 17, 2017

இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் மொன்டி பனேசர், அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கான சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள தொடரின் நிமித்தம் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 34 வயதான பனேசர், 2012-2013இல் இந்திய அணிக்கு எதிரான தொடரை இங்கிலாந்து கைப்பற்றுவதற்கு முக்கிய பங்கினை வழங்கி இருந்தார். இந்த தொடரில் அவர் 17 விக்கட்டுகளை கைப்பற்றி இருநதார். எவ்வாறாயினும் அவர் அண்மைய இங்கிலாந்து தொடரில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. எனினும் அவர் இந்திய மண்ணில்

இஸ்தான்புல் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது

Posted by - January 17, 2017

துருக்கி – இஸ்தான்புல் நகரில் உள்ள இரவு விடுதி ஒன்றில் புதுவருட பிறப்பு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலின் சூத்திரதாரி இஸ்தான்புல்லில் உள்ள தொடர்மனை குடியிருப்பு ஒன்றில் தமது நான்கு வயதான மகனுடன் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் ஏற்கனவே உரிமை கோரி இருந்தனர். துருக்கியில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றை வெளிப்படையாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமை

இறுதியாக நிலவில் நடந்த மனிதர் காலமானார்

Posted by - January 17, 2017

இறுதியாக நிலவில் நடந்த மனிதரான ஜீன் செர்னன் தமது 82வது வயதில் உயிரிழந்தார். நாசா இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரையில் நிலவில் 12 பேர் நடந்துள்ளனர். அவர்கள் ஆறு பேர் மாத்திரமே தற்போது உயிருடன் உள்ளன. 1972ம் ஆண்டு இறுதியாக ஜீன் செர்னன் நிலவில் கால் பதித்தார். அத்துடன் இரண்டு தடவைகள் நிலவில் நடந்த 3 பேருள் அவரும் ஒருவராவார். அப்பலோ 17 திட்டத்தின் கட்டளைத் தளபதியாகவும் அவர் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

58 நிபந்தனைகளில் உண்மையில்லை – அரசாங்கத் தகவல் திணைக்களம்

Posted by - January 17, 2017

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட 58 நிபந்தனைகளுக்கு இணங்கி இருப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையில் நடைபெறும் மறுசீரமைப்பு செயற்பாடுகளை அங்கீகரித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச்சலுகையை வழங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதற்காக அரசாங்கம் எந்த வகையான நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தாம் நிரபராதி – நாமல் ராஜபக்ஷ

Posted by - January 17, 2017

ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகாமையால், அந்த ஆணைக்குழுவை அவமதித்ததாக தெரிவித்து தொடுக்கப்பட்ட வழக்கில் தாம் நிரபராதி என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். வாக்குமூலங்களை வழங்குவதற்கு தாம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்த போதும், பல தடவைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருக்கவில்லை. இதனால் அவருக்கு எதிராக ஊழல் மற்றும் மோசடிகள் விசாரணை ஆணைக்குழு, அவமதிப்பு வழக்கினை பதிவு

தேர்தலை உடன் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய

Posted by - January 17, 2017

தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது கடினமானது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை. நாடாளுமன்றத்திடமும் இல்லை. உள்ளுராட்சி மன்ற அமைச்சிடம் தான் அந்த அதிகாரம் உள்ளது. எந்தவொரு தேர்தலும் குறித்த தினத்தில் நடத்தப்படாவிட்டால் அது ஜனநாயகத்துக்கு பாதகமானது என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கூறியுள்ளது. ஜனநாயகத்துக்கு

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளனர் – ஜனாதிபதி

Posted by - January 17, 2017

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு அதற்கு எதிராக செயற்படுபவர்கள் குறித்து மக்கள் அறிந்துவைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற ‘நல்லாட்சி அரச பௌத்த கொள்கை’ என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சியை நடைமுறைப்படுத்துகின்றபோது ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை மற்றும் அரச அதிகாரிகள் முக்கிய இடம் வகிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் அவர்களை உள்ளடக்கிய அரசாங்கம் எவ்வாறு செயற்பட்டது என்பது தொடர்பில் மக்களிடம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிடிவாதம்

Posted by - January 17, 2017

புதிய அரசியல் யாப்பு தொடர்பான கருத்துக் கணிப்பு நடத்தப்படாமல், ஜனாதிபதிக்கு மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஏற்படுத்தி பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதற்காகவே புதிய அரசாங்கம் மக்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு எதிராக ஜனாதிபதியும் பிரதமரும் செயற்படமுடியாது. தற்போது கருத்துக் கணிப்பை நடத்த எதிர்ப்பு

இல்லாத பதவிக்கு வேட்பாளரை நியமனம் – குறைகூறுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - January 17, 2017

இல்லாத ஒரு ஜனாதிபதி பதவிக்காக சுதந்திரக் கட்சியும், மஹிந்த அணியும் வேட்பாளரை நியமித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது. பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக ஒன்றிணைந்த

ஈரானிடமிருந்து மசகு எண்ணை இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம்

Posted by - January 17, 2017

ஈரானிடமிருந்து மசகு எண்ணை மற்றும் எரிதிரவத்துடன் தொடர்புடைய பொருட்களை மீண்டும் இறக்குமதி செய்ய இலங்கை விருப்பம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஈரான் வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷரீபை தெஹ்றானில் வைத்து சந்தித்துள்ளார். இதன்போது இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். நிதி தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்ட பின்னர் இரண்டு நாடுகளும் எரிசக்தி தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கும் ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.