58 நிபந்தனைகளில் உண்மையில்லை – அரசாங்கத் தகவல் திணைக்களம்

337 0

infoஇலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. ப்ளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட 58 நிபந்தனைகளுக்கு இணங்கி இருப்பதாக கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போது இலங்கையில் நடைபெறும் மறுசீரமைப்பு செயற்பாடுகளை அங்கீகரித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த வரிச்சலுகையை வழங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இதற்காக அரசாங்கம் எந்த வகையான நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.