தேர்தலை உடன் நடத்த முடியாது – மஹிந்த தேசப்பிரிய

245 0

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)தற்போதைய நிலைமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவது கடினமானது என தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தும் அதிகாரம் எம்மிடம் இல்லை.

நாடாளுமன்றத்திடமும் இல்லை.

உள்ளுராட்சி மன்ற அமைச்சிடம் தான் அந்த அதிகாரம் உள்ளது.

எந்தவொரு தேர்தலும் குறித்த தினத்தில் நடத்தப்படாவிட்டால் அது ஜனநாயகத்துக்கு பாதகமானது என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே கூறியுள்ளது.

ஜனநாயகத்துக்கு பாதகம் ஏற்படுவதால், சர்வஜன வாக்குரிமை குறித்து மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலைமையைத் தோற்றுவிக்கலாம்.

எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்தக்கூடிய சாதக நிலைமை தற்போது குறைவாகவே காணப்படுகிறது.

ஏனெனில், தேர்தல் ஏற்பாடுகளுக்காக தமக்கு குறைந்தபட்சம் 75 நாட்கள் தேவை.

இந்த நிலையில், தொகுதிகள் எவை என்பது கூட தற்போது தமக்குத் தெரியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.