இல்லாத பதவிக்கு வேட்பாளரை நியமனம் – குறைகூறுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

239 0

79093_73525nalin-bandara-31-720x480இல்லாத ஒரு ஜனாதிபதி பதவிக்காக சுதந்திரக் கட்சியும், மஹிந்த அணியும் வேட்பாளரை நியமித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனதான் ஜனாதிபதி வேட்பாளர் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூறுகின்றது.

பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிடுகின்றது.

எனக்குத் தெரிந்த வகையில் புதிய அரசியல் அமைப்பில் ஜனாதிபதி பதவி கிடையாது.

எனவே, இல்லாத ஒரு பதவிக்காக வேட்பாளரை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியம் இல்லை என நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வருடத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதாக மஹிந்த ராஜபக்ஷ எதிர்வு கூறியுள்ளார்.

அவரது எதிர்வு கூறல்களை கருத்திற் கொள்ள வேண்டாம் எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.