ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை – இராணுவப் பேச்சாளர்

Posted by - January 18, 2017

ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இன்று இதனை தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஓமாந்தை சோதனைசாவடிக்கு அருகாமையில் உள்ள இடத்தை மாத்திரம் உரிமையாளர்களுக்கு வழங்க வவுனியா மாவட்ட செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செவிரத்ன குறிப்பிட்டார்.

பொருத்து வீடுகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted by - January 18, 2017

பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 3 பேர் கடந்த 13ஆம் திகதி வரை தமது விருப்பங்களைத் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இதனை தெரிவித்துள்ளார், கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்ட மக்களில் 16 ஆயிரத்து 119 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டிய தேவைகள் உள்ளன. இன் நிலையில் மீள் குடியேற்ற அமைச்சின் பொருத்து வீட்டுத்திட்டத்தில் பயனாளிகளை இணைந்து கொள்வதற்கு எமது மாவட்டத்திற்கு 11,

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 18, 2017

இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 3 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் அலங்காநல்லூர் மற்றும் மெரினா கடற்கரை, திண்டுக்கல், கடலூர்

நாட்டின் தனித்துவ கலாசார பண்பாடுகளுக்கு முரணான நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாம் -கிழக்கு மாகாண முதலமைச்சர் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் வலியுறுத்தல்

Posted by - January 18, 2017

ஜீஎஸ்பி பிளஸ் சலுகையை  வழங்குவதற்கு நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவ பண்பாட்டுக்கு முரணாண நிபந்தனைகளை முன்வைக்க வேண்டாமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்   ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். இவ்வாறான நிபந்தனைகளை முன்வைப்பதன் நாட்டில் மேலும் பல புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கவே வழிவகுக்கும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார். ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் வௌிவிகாரங்கள் தொடர்பான துணை தலைமைப் பொறுப்பாளர் (dietmar krissler)  டீட்மர் கிறிஸ்லர் மற்றும் கிழக்கு

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு திகதிக்கு மாற்றம்

Posted by - January 18, 2017

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற இருக்கின்ற கிழக்கு எழுக தமிழ் பிற்போடப்பட்டு உதிர்வரும் 28 ம் திகதி கல்லடி நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறஉள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ. வசந்தராசா தெரிவித்தார். மட்டக்களப்பு தண்டவன்வெளி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம்,தமிழ்

அமெரிக்க இராணுவ ரகசியத்தை கசியவிட்டவருக்கு ஒபாமா மன்னிப்பு

Posted by - January 18, 2017

விக்கி லீக்ஸ்க்கு இராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கைக்கு பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க இராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டது. விக்கி லீக்சுக்கு இரகசிய ஆவணங்களை வழங்கியதாக 29 வயதான திருநங்கை செல்சியா மேன்னிங் கைது செய்யப்பட்டார். ஆணாக பிறந்த அவர், பின்னர் சத்திர சிகிச்சை செய்து பெண்ணாக

சிறந்த பத்தில் இன்று ஐந்தாவது – ஒன்றிணைந்த எதிர்கட்சி

Posted by - January 18, 2017

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ இன் கீழ் ஆளும் அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த ஐந்தாவது முறைப்பாடு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்ற விசாரணை திணைக்கத்திடமே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். இலங்கை வானூர்தி நிறுவனத்திற்கு ஏ 350 – 900 ரக வானூர்தியை கொள்வனவு செய்யும் போது

928 கிலோ கொக்கேய்ன் வழக்கு இடைநிறுத்தம்

Posted by - January 18, 2017

கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 928 கிலோ கொக்கேய்னுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை வழக்கு விசாரiணைகள் இடைநிறுத்தி வைக்கபட்டுள்ளன. கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த கொக்கேய்ன் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லை என போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளனர். அத்துடன், சந்தேகத்துக்குரியவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கால அவகாசமும் கோரியுள்ளனர். இந்த

இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

Posted by - January 18, 2017

வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 156 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை ஆகிய 13 மாவட்டங்களே வறட்சியால் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டமே அதிக

ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பங்கை வகிக்கவுள்ளது இலங்கை – பிரதமர்

Posted by - January 18, 2017

ஆசிய பிராந்தியத்தில் ஒன்றிணைந்த வர்த்தக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியா, பங்களாதேஸ் மற்றும் வியட்நாம் போன்ற இந்துசமுத்திர நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கை சிறந்த உறவை பேணுகிறது. அத்துடன் ஜப்பான் போன்ற ‘ஆசியான்’ நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை இலங்கை பேணி வருகிறது. அதேநேரம் இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து