இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

247 0

1-324-765x510வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 156 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம், கண்டி, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை, கம்பஹா, களுத்துறை, ஹம்பாந்தோட்டை ஆகிய 13 மாவட்டங்களே வறட்சியால் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தில் 60 ஆயிரத்து 401 குடும்ங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 2 ஆயிரத்து 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 51 ஆயிரத்து 266 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலையத்தில் கண்டி, பதுளை, இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களில் 3 ஆயிரத்து 915 குடும்பங்ளைச் சேர்ந்த 14 ஆயிரத்து 713 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.