கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு திகதிக்கு மாற்றம்

235 0
unnamedமட்டக்களப்பில் எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற இருக்கின்ற கிழக்கு எழுக தமிழ் பிற்போடப்பட்டு உதிர்வரும் 28 ம் திகதி கல்லடி நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெறஉள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ. வசந்தராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு தண்டவன்வெளி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம்,தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ. வசந்தராசா ஆகியோர் கலந்து கொண்டு  பத்திரிகையாளர் மகாநாடு நடாத்தியபோது இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவை கிழக்கு எழுக தமிழ் நிகழ்வை மட்டக்களப்பில் நடாத்த எதிர்வரும் 21 ம் திகதி முடிவு செய்து அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தது இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எழுக தமிழ் நிகழ்விற்கு முன்னர் நாளை 19 திகதி உழவர் விழாவான பொங்கல் விழாவை நடாத்த ஏற்பாடு செய்துவருகின்றது
அவ் விழா சிறப்பாக நடைபெறுவதற்கு இடமளிக்கும் வகையிலும் கிழக்க மாகாண பாடசாலைகள் பொங்கள் தினத்திற்கு முதல் நாள் விடுமுறை வழங்கப்பட்டு அதனை எதிர்வரும் சனிக்கிழமை நடாத்த கிழக்கு மாகாண கல்வி அமைச்ச முடிவெடுத்திருக்கின்ற நிலையில் பாடசாலை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்ற வகையிலும் 21 ம் திகதி இடம்பெறவிருந்த எழுக தமிழ் நிகழ்வை பிற்போடப்பட்டு எதிர்வரும் 28 ம் திகதி நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தவுள்ளதாகவும்
கல்லடி பாலத்திற்கு அருகில் இருந்து எழுச்சிபேரணியாக நாவற்குடா விவேகானந்;தா விளையாட்டு மைதைனத்திற்கு டிசல்ல உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்