ஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்படவில்லை – இராணுவப் பேச்சாளர்

246 0

omanthaiஓமந்தை இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன இன்று இதனை தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஓமாந்தை சோதனைசாவடிக்கு அருகாமையில் உள்ள இடத்தை மாத்திரம் உரிமையாளர்களுக்கு வழங்க வவுனியா மாவட்ட செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செவிரத்ன குறிப்பிட்டார்.