928 கிலோ கொக்கேய்ன் வழக்கு இடைநிறுத்தம்

241 0

downloadகொழும்பு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 928 கிலோ கொக்கேய்னுடன் தொடர்புடைய சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரை வழக்கு விசாரiணைகள் இடைநிறுத்தி வைக்கபட்டுள்ளன.

கொழும்பு பிரதான நீதவான் லால் பண்டார இன்று இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குறித்த கொக்கேய்ன் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் இன்னும் முடிவுறவில்லை என போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகத்துக்குரியவர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கால அவகாசமும் கோரியுள்ளனர்.

இந்த விடயங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகத்துக்குரியவர்களைக் கைதுசெய்யும் வரை வழக்கு விசாரணைகளை இடைநிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

ஈக்குவடோரில் இருந்த வந்த கப்பலிலிருந்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி குறித்த கொக்கேய்ன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.