அமெரிக்க இராணுவ ரகசியத்தை கசியவிட்டவருக்கு ஒபாமா மன்னிப்பு

248 0

_93592567_manning_ap976விக்கி லீக்ஸ்க்கு இராணுவ ரகசியத்தை கசியவிட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 35 ஆண்டு சிறை தண்டனை பெற்ற திருநங்கைக்கு பொது மன்னிப்பு அளித்த விடுதலை செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு விக்கி லீக்ஸ் இணையதளம் அமெரிக்க இராணுவ ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.

விக்கி லீக்சுக்கு இரகசிய ஆவணங்களை வழங்கியதாக 29 வயதான திருநங்கை செல்சியா மேன்னிங் கைது செய்யப்பட்டார்.

ஆணாக பிறந்த அவர், பின்னர் சத்திர சிகிச்சை செய்து பெண்ணாக மாறினார்.

இந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து அவர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவர் இரண்டு முறை தடவை தற்கொலைக்கு முயன்றதுடன், உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் மேற்கொண்டார்.

இதனை அடுத்து அவர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்தநிலையில், பதவி விலகவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, செல்சியா மேன்னிங்கை விடுதலை செய்ய பணிப்புரை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், இதேபோன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு முகவர் அமைப்பின் எட்வட் ஸ்னோவ்டனுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.

தற்போது, ரஸ்யாவில் அடைக்கலம் பெற்றுள்ள எட்வட் ஸ்னோவ்டனுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் புகலிடம் அளிக்கப்படும் என ரஸ்ய அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.