சிறந்த பத்தில் இன்று ஐந்தாவது – ஒன்றிணைந்த எதிர்கட்சி

236 0

z_p10-Oppositionஒன்றிணைந்த எதிர்கட்சியின் ‘சிறந்த பத்து’ இன் கீழ் ஆளும் அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் குறித்த ஐந்தாவது முறைப்பாடு இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்ற விசாரணை திணைக்கத்திடமே இவ்வாறு முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார்.

இலங்கை வானூர்தி நிறுவனத்திற்கு ஏ 350 – 900 ரக வானூர்தியை கொள்வனவு செய்யும் போது கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கியதன் மூலம் ஆயிரத்து 500 மில்லியன் ருபா மோசடி செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, அமைச்சர் கபீர் ஹாசிம், இலங்கை வானூர்தி நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபைக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் ‘சிறந்த 10’யின் கீழ் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, வெளிநாட்டு வேவைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள, சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு எதிராகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சி, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்ற விசாரணை திணைக்கத்திடம் முறைபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.