ஆசிய பிராந்தியத்தில் முக்கிய பங்கை வகிக்கவுள்ளது இலங்கை – பிரதமர்

258 0

ranil-pm-400-seithy2ஆசிய பிராந்தியத்தில் ஒன்றிணைந்த வர்த்தக செயற்பாடுகளில் முக்கிய பங்கினை வகிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாடு தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தியா, பங்களாதேஸ் மற்றும் வியட்நாம் போன்ற இந்துசமுத்திர நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் ஊடாக இலங்கை சிறந்த உறவை பேணுகிறது.

அத்துடன் ஜப்பான் போன்ற ‘ஆசியான்’ நாடுகளுடனும் வர்த்தக உறவுகளை இலங்கை பேணி வருகிறது.

அதேநேரம் இந்தியாவின் தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களுடன் முக்கிய வர்த்தக உடன்படிக்கைகளையும் இலங்கை செய்துக் கொள்ளவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.