தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை-ஜனநாயகப் போராளிகள் கட்சி;(காணொளி)

Posted by - January 21, 2017

தமிழ் அரசியல் தலைமைகள், முன்னாள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை என, ஜனநாயகப் போராளிகள் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. தமிழ் அரசியல் தலைமைகள் போராளிகளின் நலன்மீது அக்கறை கொண்டவர்கள் இல்லை எனவும், இவர்கள் முன்னாள் போராளிகளைப் பகடைக்காய்களாக மீண்டும் மீண்டும் பயன்படுத்த முயற்சிப்பதாகவும், ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இராசையா கதிர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில்  நேற்று மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த ஊடகவியலாளர்

வவுனியாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 21, 2017

இந்தியா தமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியாவில் இளைஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். நேற்று மாலை 4 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா மாவட்ட இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது, வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரனும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்திருந்தார். மாட்டு இனங்களைப் பாதுகாப்போம், தடை அதை உடை, ஜல்லிக்கட்டு நம் இனத்தின் அடையாளம், காப்போம் காப்போம் மாட்டைப் பாதுகாப்போம், தமிழகத்திற்காக

சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 21, 2017

புத்தளத்தில் சட்டபூர்வமாகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களுக்கு பதிவுத்திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. புத்தளத்தில் சட்ட பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த ஜோடிகளை இனங்கண்டு, அவர்களை பதிவுத் திருமணம் செய்து வைக்கும் பணிகளை பிரதேச செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன இணைந்து முன்னெடுத்து வருகின்றன. இதற்கமைய முந்தல் பிரதேச செயலகத்திற்கு, பகுதியில் மூன்று ஜோடிகளுக்கு நேற்று காலை மதுரங்குளி நகரில் அமைந்து சேவை இல்லத்தில் வைத்து

அவசர சட்டம் இன்று அமல்: நாளை ‘ஜல்லிக்கட்டு’ நடத்த ஏற்பாடு

Posted by - January 21, 2017

தமிழ்நாட்டில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இன்று கையொப்பமாகும். இதனையடுத்து நாளை (22) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா.. வைரலாகும் இளம் பெண்ணின் கோஷம்!

Posted by - January 21, 2017

சின்னம்மா, சின்னம்மா ஓபிஎஸ்ச எங்கம்மா என்று இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை மெரினா பீச்சில்தான் இந்த கோஷம் விண்ணை முட்டுகிறது.

ஜல்லிக்கட்டு சட்டவிரோதம் : தமிழர்களுக்கு தெரியவில்லை, தடுத்தே தீருவோம் : பீட்டா ஜோஜிபூரா

Posted by - January 21, 2017

பீட்டா அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் பூர்வா ஜோஷிபூரா, அளித்த பேட்டியில் கூறியதாவது,

கல்முனை வலய ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவை வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - January 21, 2017

கல்முனை கல்வி வலயத்தை சேர்ந்த ஆசிரியர்களின் சம்பள நிலுவையினை வழங்குவதற்கு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் இதுவரை எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் சமுர்த்தி வங்கி அதிகாரிகள்

Posted by - January 21, 2017

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளில் 270கோடி ரூபா பணத்தை அடைகாக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடர்ந்து செய்வார்களானால் அதற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடாத்த வேண்டிய பொறுப்பு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு வீடுகள்

Posted by - January 21, 2017

மட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது

Posted by - January 21, 2017

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்படுவதுதான் உகந்தது அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்பட வேண்டிய காலம் விரைவில் வரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.