சஜித் பிரேமதாசவினால் மட்டக்களப்பு மக்களுக்கு வீடுகள்

409 0

sssssssssssssssssssssssssssssssssssssssssssssssமட்டக்களப்பில் மாதிரி கிராமம் உருவாக்கும் திட்டத்திற்காக மட்டக்களப்பு கல்குடா தொகுதி மக்களுக்கு ஐம்பது வீடுகள் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வே.மகேஸ்வரியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மறைந்த நிதியமைச்சர் கே.டப்ளியூ.தேவநாயகத்தின் ஞாபகார்த்தமாக மாதிரி கிராமம் அமைக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாகவும் அமைப்பாளர் வே.மகேஸ்வரன் தெரிவித்தார்.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை அமைப்பாளர் வே மகேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி ஊழியர் சங்கத்தினர், இளைஞர் அமைப்பு தலைவர் தி.சிவநிதன், மகளிர் அமைப்பு தலைவி சசிகலா விஜயதேவா மற்றும் இணைப்பாளர் சாபீர் ஆகியோர் சந்தித்து மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை முன்வைத்தனர்.

அதற்கமையவே குறித்த ஐம்பது வீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாவும் அத்துடன் இந்த வீடுகள் முறக்கொட்டாஞ்சேனை மற்றும் கிரான் பிரதேச மக்களுக்காக வழங்கவுள்ளதாகவும் அமைப்பாளர் தெரிவித்தார்.