முதலமைச்சர்கள் – மஹிந்த சந்திப்பு தோல்வி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாகாண சபை முதலமைச்சர்களுக்கு இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடற்ற நிலையில் நிறைவடைந்தது. இந்த கலந்துரையாடலின் போது, இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் சுதந்திர கட்சி எவ்வாறு போட்டியிட வேண்டும் என்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த கலந்துரையாடலின் போது, மஹிந்த ராஜபக்சவுடன் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, மஹிந்த யாப்பா அபயவர்தன மற்றும் காமினி

