2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் முறைப்பாடு செய்த சஜித் பிரேமதாச!

335 0

sajith-premadasa2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தமது அமைச்சிற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது எனவும் பின்னர் அந்த தொகை தமக்கு அறிவிக்காமலேயே குறைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 600 கோடி ரூபா பணத்தில் 200 கோடி ரூபா மட்டுமே தமக்கு எஞ்சியுள்ளதாகவும் 400 கோடி ரூபா வேறும் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 200 கோடி ரூபா வடக்கு அபிவிருத்தி அமைச்சிற்கும் 200 கோடி ரூபா தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கு எவ்வித அறிவிப்பும் வழங்காது இவ்வாறு அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வேறும் அமைச்சுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன உறுதியளித்துள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நாடு திரும்பியதும் இந்த விடயமாக பேசி தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சர் சஜித்திற்கு அறிவித்துள்ளார்.