ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கவில்லை! மகிந்த அமரவீர

245 0

1291697912Amaraஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை மற்றும் மீன் ஏற்றுமதி தடைகளை நீக்க ஐரோப்பிய ஒன்றியம் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. அவற்றை வழங்க 58 வழிமுறைகளை மட்டும் கையாளுமாறு அறிவித்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த வழிமுறைகள் எந்த வகையிலும் நாட்டுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனவும் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த கோரிக்கைக்கு நல்லாட்சி அரசாங்கம் அடிப்பணியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிவாரணங்களை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ராஜபக்ச அரசாங்கத்திடம் முன்வைத்த யோசனைகளையே தற்போதைய அரசாங்கத்திடமும் முன்வைத்துள்ளது.

ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை கிடைப்பது இலங்கையின் பொருளாதாரத்திற்கு புதிய உயிர் கொடுப்பதாக அமையும்.

இந்த வரிச்சலுகை ஆடை தொழிற்துறைக்கு மட்டுமல்ல, இறப்பர் சார்ந்த மற்றும் ஏனைய சிறிய உற்பத்தி பொருட்களுக்கும் நன்மை கிடைக்கும் எனவும் அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.