புதுவை ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் நடந்த மாணவர்கள் போராட்டம் நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பல இடங்களில் வன்முறை தலைதூக்கிய போதிலும் புதுவையில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை.
தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக எம்.பி. தருண்விஜய் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தும் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால், விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தை சேர்ந்த 22 போலீசாருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நடராஜா ரவிராஜ் கொலை வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த கொலை வழக்கு தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை நிராகரிப்பதாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை அகற்றி எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவி தாக்கல்
மட்டக்களப்பு பிரதேசம் நீண்ட வரட்சியின் பின் நேற்றுதிங்கள்கிழமை தொடக்கம் இன்று வரை இரண்டு நாட்களும் இரவு பகலாக இடைவிடாது தொடர்ந்து பெய்துகொண்டு வரும் அடை மழை காரணமாக இப்பிரதேச மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையிலும் தொழிலுக்கு செல்லுகின்றவர்கள் நேரத்திற்கு செல்ல முடியாத நிலையினால் தொடர்ந்து இடைவிடாது பெய்துகொண்டுவருகின்றது. இப்பிரதேசத்திலுள்ள குளங்கள்ஆறுகள் நீர்நிரம்பி வழிந்தோடுவதையும் மற்றும் பல இடங்கள் நீர் நிரம்பி காணப்படுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையானின் பிணைமனுவை மே மாதம் 30ஆம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த மனு இன்று பிரதம நீதியரசர் கே.ஶ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது. இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தன்னை விடுவிக்குமாறு கோரி குறித்த மனுவை பிள்ளையான் தாக்கல் செய்ததிருந்தார். கடந்த 2005.12.25ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில்
மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை, சிறுவர் விளையாட்டு பூங்கா என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மடு வலயக்கல்வி பணிப்பாளர், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சுதுமலை வடக்கு மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் நேற்று (23) மீட்கப்பட்டுள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், அதேயிடத்தை சேர்ந்த சின்னையா மார்கண்டு (வயது 84) என, பொலிஸார் தெரிவித்தனர். அதிகாலை காணாமல் போயிருந்த முதியவரை, அவரது மனைவி தேடியபோது, கிணற்றில் இவரது சடலம் மிதந்தாகவும் இதனை அடுத்து, சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.