தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது

354 0

தேசிய கீதம் பாடிய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று பாஜக எம்.பி. தருண்விஜய் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பா.ஜனதா எம்.பி. தருண்விஜய் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு திருக்குறளையும், திருவள்ளுவரையும் கொண்டாடி வருகிறது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை கும்பலும் உள்ளே புகுந்து போராட்டத்தை சீர்குலைக்க நினைத்தார்கள். இதையும் மாணவர்கள் எதிர் கொண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

கோவையில் மாணவர்கள் தேசிய கீதம் பாடிய போது போலீசார் தடியடி நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கொண்டாடும் விழா மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கொண்டாடும் மிகப்பெரிய கலாச்சார விழாவாகும்.

பிரதமர் மோடி, தமிழர்கள் மீதும், தமிழர்கள் கலாச்சாரம், பண்பாடு மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.