மன்னாரில் ஆரம்ப பாடசாலைக்கான சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

386 0

மன்னார் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மாதிரி நூலகம் மற்றும் கணினி அறை, சிறுவர் விளையாட்டு பூங்கா என்பன திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நேற்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மடு வலயக்கல்வி பணிப்பாளர், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.